திராவிடமும் வேண்டாம் தேசியமும் வேண்டாம்
வாருங்கள் தமிழர்களே
புதிய தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்குவோம்

அன்பார்ந்த தமிழர்களே,

இந்திய மக்களின் முதன்மையான பிரச்சனையாக, வறுமை, வேலையில்லா நிலை பிற்போக்குத்தனம் சமூக வேறுபாடுகள் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் போன்றவை உள்ளன. சார்பு பொருளாதாரம் உலக மயமாக்கம் உள்நாட்டு ஆதாரங்களை புறம் தள்ளுதல் இன்றியமையாத பொருட்களின் உற்பத்தியும் சிலரிடமே இருப்பது உள்ளிட்டவை மக்களின் முதன்மையான பிரச்சனைகளுக்கு அடிப்படையான காரணமாக அமைகிறது. எனவே சுய சார்பு பொருளாரம் உள்நாட்டு ஆதாரங்களை பயன்படுத்துதல் இன்றியமையாத பொருட்களின் உற்பத்தி மக்களிடம் இருத்தல் என பொருளாதாரம் மாற்றப்பட்டால் ஒழிய வறுமை வேலையில்லா நிலை பிற்போக்கு தன்மை சமூக வேறுபாடுகள் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை ஒழியாது.

தங்களுக்குப் பொருளாதார கொள்கைகள் உண்டென தேசிய கட்சிகள் கூறிக் கொண்டாலும் தேசிய கட்சிகளின் கொள்கைகள் உலகமயமாக்கலை தழுவியதாகவே உள்ளன. பொதுவுடமையல்லாத தேசிய கட்சிகளின் நிலைப்பாடு இந்திய நாட்டில் நிலவும் அடிப்படை பிரச்சனைகளைத் தீர்க்க இயலாதது மட்டுமல்ல பிரச்சனைகளை பெரிதுபடுத்திக்கொண்டே உள்ளன. பொதுவுடமை பேசும் தேசிய கட்சிகளின் பொருளாதாரக் கொள்கைகள் இந்திய சூழ்நிலைக்கு ஏற்றதாக இல்லாமல் தங்கள் கொள்கைகள் ஆட்சி புரியக்கூடிய நாடுகளின் எண்ணங்களை எதிரொலிப்பதாகத்தான் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திராவிடக் கட்சிகளுக்குப் பொருளாதாரக் கொள்கைகளே இல்லை எனவே இத்தகைய கட்சிகளால் மக்களின் முதன்மை பிரச்சனைகளான வறுமை வேலையின்மை சமூக வேறுபாடுகள் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் முதலியவற்றை முற்றிலும் ஒழித்துவிட இயலாது.

இதைத்தவிர பொருளாதார ஆளுமையை தமிழ் மக்கள் தமிழகத்திற்கு உள்ளும் வெளியிலும் இழந்து விட்டனர். நன்கு வளமான பொருளாதாரத்தில் வலிமையான இனங்கள் மட்டுமே பிற இனங்களின் போட்டியிலிருந்து தற்காத்துக் கொள்ள இயலும் என்பது உண்மை. குறிப்பாகச் சொல்லப் போனால் ஒரு மரியாதைக்குரிய இனமாக வாழ வேண்டுமென்றாலும் கூட மண்ணின் மைந்தருக்கான பொருளாதார ஆளுமை என்பது இன்றைய கால கட்டத்தில் தேவைப்படுகிறது. இல்லையெனில் அந்த இனம் அழிந்து போகும். எனவே தமிழரினம் தன்னை தற்காத்துக் கொள்ளத் தன்னைப் பொருளாதார வலிமையான இனமாக மாற்றிக் கொள்ள வேண்டும் தமிழருக்காக என்று கூறிக் கொள்ளும் தமிழகத்தைச் சார்ந்த அரசியல் கட்சிகள் இத்தகைய நோக்கில் எள்ளவும் செயல்படவில்லை எனவே பொருளாதார ஆளுமைக்கான சிந்தனையையும் செயற்பாட்டையும் தமிழ் மக்கள் மேற்கொள்ளவேண்டும்.

இதே போல் தமிழ்நாட்டில் வாழ்ந்துவரக்கூடிய பிற திராவிட மொழிகளாக கொண்டவர்கள் தங்களைத் தமிழர்களாக வெளில் காட்டிக் கொண்டு அரசியலில் ஆளுமை பெற்று தாங்கள் சார்ந்துள்ள மொழி பேசுபவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து உண்மையான தமிழர்களைத் தங்கள் சொந்த பூமியிலேயே செல்லாக் காசாக மாற்றி வருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் வெளியிலே தாங்கள் பேசிடும் தமிழை வைத்துக் கொண்டு தமிழர்களாகக் காட்டிக் கொண்டு தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள்

இதன் காராணமாக தமிழ்நாட்டின் அரசியல் திரைப்படம் தொழிற்துறை கல்வி உட்பட எல்லாத் துறைகளிலும் பிற மொழி பேசுவோர்கள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இத்தகைய பிற மொழியினரின் வளர்ச்சிக்கு அரசியலில் பிற மொழியினர் பெற்றுதள்ள செல்வாக்கு தான் காராணமாக அமைந்தள்ளது. ஆனால் ஆந்திரா கர்நாடகா கேரளா போன்ற திராவிட மாநிலங்களில் அந்தந்த மொழி பேசுபவர்களைத் தவிர ஏனையோர் அரசியலில் செல்வாதக்கு பெறுவது அனுமதிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 50 பேர்களில் தாய்மொழி தமிழ் அல்ல. அது போல 39 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 8 பேர்களது தாய்மொழி தமிழல்ல.இது மட்டுமல்ல, திராவிடக் கட்சிகள் தேசியக் கட்சிகள் இரண்டிலும் பொறுப்பு வகிக்கின்ற தலைமை நிர்வாகிகள் பலரது தாய்மொழி தமிழல்ல. எனவே தமிழ் மக்களின் பிரதிநிதியாக உள்ள இவர்கள் தங்களின் பூர்வீக மாநிலத்திற்கு எதிராக கருத்துக்களை முன் வைக்கவோ மத்திய அரசை வற்புத்தவோ முன் வருவதில்லை. இதனை காவிரி நதி நீர் முல்லைப் பெரியாறு பாலாற்றின் குறுக்கே அணை போன்ற பிரச்சனைகளின் போது தமிழ்நாடு வெளிப்படையாக சந்தித்தது. இதன் காராணமாக தமிழர்கள் தங்கள் சொந்த பூமியிலேயே இரண்டாம் தர குடிமக்களாக மாறிவரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய கொள்கைகளை முன் வைத்து தமிழக மக்களிடம் விழிப்புனர்வு ஏற்படுத்துவதற்காக மக்கள் மாநாடு என்ற அமைப்பு 2005 செப்டம்பரில் தொடங்கப் பெற்றது. தமிழகத்தின் பற்பல ஊர்களில் நடைபெற்ற கூட்டங்களைத் தொடர்ந்து அரசியல் அமைப்பாக மாற்றுவது தான் மக்கள் மாநாடு கொள்கைகளை விரைவாகவும் உறுதியாகவும் மக்களிடம் கொண்டு செல்ல இயலும் என்ற அடிப்படையில் 2006 சனவரியில் மக்கள் மாநாடு கட்சி அரசியல் அமைப்பாக மாற்றப்பட்டது.

தேர்தல் ஆணையத்தில் பதிவுக்காகக் காத்திருந்த போது 2006 மே மாதம் தமிழ்நாடு சட்டசபைக்கான தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. எனவே மக்கள் மாநாடு கட்சியின் சார்பாக சுயேட்சையாக நான்கு தொகுதிகளில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் ரூ 10,000 மட்டுமே செலவழிப்பதென்றும் முடிந்தவரை நேரடி தொடர்புகள் மூலம் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள பழைய மற்றும் புதிய கட்சிகள் ஒவ்வொரு தொகுதிகளிலும் கோடிக்கணக்கான தொகையைச் செலவழிக்க இருந்த போது சோதனை அடிப்படையில் இறங்கும் போது இந்த தொகையே போதுமானது என்றும் தீர்மானித்தோம். அதன் அடிப்படையில் வில்லிவாக்கம் தொகுதியில்போட்டியிட்ட வழக்கறிஞர் திரு. சதீஷ்குமார் 2150 வாக்குகளும் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்ட திரு. ராமநாதன் 2400 வாக்குகளும் ஆரணியில் தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் திரு. திருஞானம் 860 வாக்குகளும், பேரவூரணியில் தொகுதியில் போட்டியிட்ட திரு. ராஜா 1160 வாக்குகளும்பெற்றனர். கோடிக்கணக்கான தொகையைச் செலவழித்த போட்டியிட்ட பிற வேட்பாளர்களுடன் ஒப்பீடு செய்கையில் மக்கள் மாநாடு கட்சி சார்பாகபோட்டியிட்ட பிற வேட்பாளர்களுடன் ஒப்பீடு செய்கையில் மக்கள் மாநாடு கட்சி சார்பாக போட்டியிட்டவர்கள் பெற்றிருந்த வாக்குகள் மூலமாக தமிழகமக்கள் ஒரு மாறுதலுக்கான அரசியலை வரவேற்கிறார்கள் எனபதை அறிய முடிகிறது.

இதன் பின்னர் 2006 அக்டோபர் 6 ஆம் தேதி அன்று இந்திய தேர்தல் ஆணையத்தில் மக்கள் மாநாடு கட்சி முறைப்படி அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் மாநாடு கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டங்கள் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிள்றன. குறிப்பாக கீழ்வரும் நிகழ்ச்சிகளை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்

தமிழக இரயிலவே பகுதிகளை பாலக்காடு இரயில்வே கோட்டத்துடன் இணைப்பதைக் கண்டித்தும், தமிழ் வளமும் செழுமையும் சீர்திருத்தக் கருத்துகளும் இல்லாத மொழி என்று கூறிய கவிஞர் அப்துல் ரகுமானை மத்திய அரசின் தமிழ் செம்மொழி ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கக் கோரியும் 2007 நவம்பர் 1 ஆம் தேதி சென்னையில் மக்கள் மாநாடு கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2008 பிப்ரவரி 1 ஆம் தேதி அன்று கடலூர் நகர் மன்றத்தில் மக்கள் மாநாடு கட்சி சார்பாக தமிழர்களின் பொருளாதார இறயாண்மை மாநாடு நடைபெற்றது. நாடாளுமன்றம் சட்டமன்றம் நீதித்துறை இந்திய அரசுபணிகளில் மொழிவாரி அடிப்படையில் இடஓதுக்கீடு அளிக்கப்படவேண்டும். தமிழ்நாட்டில் எல்லா துறைகளிலும் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

மதுரை மாவட்டம் வளையங்குளம் எலியார்பத்தி நல்லூர் சோளங்குருனரி கிராமங்களில் சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்த தமிழக அரசு நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து அந்த பகுதி விவசாயிகளை ஒன்று திரட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மக்கள் மாநாடு கட்சி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை 2008 மார்ச் 17ம் தேதியன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடத்தியது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா குன்னுர் கிராமம் பள்ளியினை மீண்டும் செயல்படக் கோரி புதுக்கோட்டையில் 09.06.2008 அன்று மக்கள் மாநாடு கட்சி சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று.பெட்ரோலியப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உணர்வைக் கண்டித்து மக்கள் மாநாடு கட்சி சார்பாக தஞ்சாவூரில் 2008 ஜூன் 19 தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

 

 

மக்கள் மாநாடு கட்சியும் தென்னிந்திய மீனவர் நல சங்கமும் இணைந்து 4------3-----2009 சென்னை ராஜாஜி சாலை சுங்கவரி அலுவலகம் முன்பு இலங்கையில் தமிழின படுகொலையை கண்டித்தும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மக்கள் மாநாடு கட்சித் தலைவர் க.சக்திவேல் தலைமையிலும் தென்னிந்திய மீனவர் நல சங்கத் தலைவர் கு.பாரதி முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு..சிவாஜிலிங்கம், பத்திரிக்கையாளர் திரு..பாண்டியன், கவிஞர் அருமையார்,திரு.கே.பி.சத்தீஸ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துக்கொகொண்டனர்.

 

 

 

இத்தகைய பணிகள் தொடர்ந்திடவும் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விரிவுப்படுத்தவும்அர்ப்பணிப்பும் தியாக மனப்பான்மையும் சமுதாய சேவை எண்ணமும் கொண்ட அனைத்துத் தமிழர்களையும் மக்கள் மாநாடு கட்சியில் இணைந்து பணியாற்ற வாருங்கள் என அன்போடு அழைக்கிறோம்.

மக்கள் மாநாடு கட்சி
222, ( ப.எண். 172), இராமகிருட்டிணா மடம் சாலை,
இராசா அண்ணாமலைபுரம்,
சென்னை-600028.

மேலும் தெரிந்துக்கொள்ள இங்கே தொடுக.

 

தொடர்புக்கு : 94440-13530,
                                       99629-57411

 

 

 

 

 

 

 

 

 

 

 

  • நாடாளுமன்ற தேர்தலில்
    தமிழகம் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும்
    மக்கள் மாநாடு கட்சி சார்பாக நின்றிட விரும்புவர்களை
    தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
    தொடர்புக் கொள்ள வேண்டிய
    எண்கள்

    -94440-13530 , 9962957411.